உலகையே உலுக்கிய கொவிட்-19 தொற்று சீனாவில் பரவிய 5 வருடங்களுக்கு பின்னர் தற்போது மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று அங்கு பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ள இந்த வைரஸால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.
இந்த மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV), இன்புளுயென்சா A, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.
சுவாச நோய்கள் அதிகரித்து வரும் போதிலும், சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார அமைப்போ (WHO) அதிகாரபூர்வமாக இன்னும் எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும் சீன அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து பாதிப்புகளை கண்காணித்து வருகிறது.