எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை செயற்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.