2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களின் வரவு – செலவு அறிக்கையை ஒப்படைக்காத வேட்பாளர்களின் தகவல்களை பொலிசாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.இரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்களின் கோப்புகளை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் பணியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.