follow the truth

follow the truth

January, 5, 2025
HomeTOP1ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா?

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா?

Published on

அலரி மாளிகையில் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து நேற்று(02) கலந்துரையாடினார்.

அங்கு செய்யப்பட்டுள்ள உருமாற்ற மாற்றங்கள் தெளிவுடனும் ஒற்றுமையுடனும் செய்யப்பட வேண்டும் என மிகவும் அழுத்தமாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அது பிள்ளைகளுக்கு மன உளைச்சல் என்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னர் ஐந்தாம் தர பரீட்சையினை ஏன் நடத்தக் காரணம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதற்கு பாடசாலைகளுக்கு மத்தியில் உள்ள வேறுபாடுதான் எனத் தெரிவித்திருந்தார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும். பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் சட்ட ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ மட்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படலாம்.

இவ்வாறான நிலைமைகளைக் குறைக்கும் வகையில் பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சையை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பொதுவான கல்வி முறை இருக்க வேண்டும்.

முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். இது அரசியல்வாதியோ, அமைச்சரோ அல்லது செயலாளரோ தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்காக அல்ல, தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் பொறிமுறையை அமைக்க முயற்சிக்கிறோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் இடையே சந்திப்பு?

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (06) நடைபெறவுள்ளது. கடந்த காலப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்திய...

மியன்மார் அகதிகளை நாடு கடத்த வேண்டாம் – முஜிபுர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மியன்மார் அகதிகளை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

பொலிஸாரின் இரு விசேட போக்குவரத்து திட்டங்கள்

Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து...