மாத்தறை சிறைச்சாலையில் போ மரக்கிளை விழுந்ததில் காயமடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு சிறைக்கைதி உயிரிழந்துள்ளார்.
அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றுமுன்தினம் (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் அதே நாளில் இறந்தார்.
இதுவரை, காயமடைந்த 7 பேர் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், மேலும் மூன்று பேர் பொது வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.