நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டமான காலநிலை காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து நுவரெலியா வரையிலும் வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஔிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர்.