follow the truth

follow the truth

April, 25, 2025
Homeஉலகம்2024 உலகின் முதல் பணக்கார குடும்பங்கள் பட்டியல்

2024 உலகின் முதல் பணக்கார குடும்பங்கள் பட்டியல்

Published on

உலகின் மிக பணக்கார குடும்பங்கள் பற்றிய பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் வால்டன் குடும்பம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அல் நஹ்யான் குடும்பம் பிடித்துள்ளது

வால்டன் குடும்பம் உலகம் முழுவதும் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டை நடத்திவருகிறது.தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

1. வால்டன் குடும்பம் – அமெரிக்கா
நிறுவனம் – வால்மார்ட்

இந்த சூப்பர் மார்க்கெட் சங்கிலி நிறுவனத்தின் பங்குகுளில் சுமார் 46% வால்டன் குடும்பத்திற்கு சொந்தமானது. உலகின் பணக்கார குடும்பத்தின் செல்வத்திற்கு அடிப்படை இந்த பங்குகளே ஆகும். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சாம் வால்டன், தான் சேர்த்த செல்வத்தை தனது குழந்தைகளிடையே பிரித்து கொடுத்தார். இதன் மூலம், அவரது குடும்பம் இந்த செல்வத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கருதினார்.

2. அல் நஹ்யான் குடும்பம் – ஐக்கிய அரபு அமீரகம்
துறை: தொழிற்துறை

ஐக்கிய அரபு அமீரகத்தை ஆளும் இந்த குடும்பம் எண்ணெய் வணிகம் மூலம் அதன் செல்வம் சேர்த்துள்ளது.

இந்த குடும்பத்தை சேர்ந்த ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருக்கிறார்.

3. அல் தானி குடும்பம் – கத்தார்
துறை: தொழில்துறை

கத்தார் நாட்டின் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த அல் தானி குடும்பம் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்களை செய்து வருகின்றது.

இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் மற்றும் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வணிகங்களை செய்து வருகின்றனர்.

4. ஹெர்ம்ஸ் குடும்பம் – பிரான்ஸ்
இந்த குடும்பத்தின் ஆறாவது தலைமுறை பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆடம்பரமான பேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறது.

இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுள் பலர் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் ஆக்செல் டுமாஸ். இவர் தற்போது நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக உள்ளார்.

5. கோச் குடும்பம் – அமெரிக்கா
ஃபிரடெரிக், சார்லஸ், டேவிட் மற்றும் வில்லியம் கோச் ஆகியோர் எண்ணெய் நிறுவனத்தை தங்கள் தந்தை பிரெட்டிடமிருந்து பெற்றனர். ஆனால் ஒரு பிரச்னைக்கு பிறகு, சார்லஸ் மற்றும் டேவிட் மட்டுமே இந்த வணிகத்தை தொடர்ந்ததர்.

எண்ணெய், ரசாயனங்கள், ஆற்றல், கனிமங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், நிதி மற்றும் பிற துறைகளில் கோச் நிறுவனத்தின் வணிகம் பரவியுள்ளது.

6. அல் சௌத் குடும்பம் – சௌதி அரேபியா
சௌதி அரேபியாவின் இந்த அரச குடும்பத்தின் செல்வம் எண்ணெய் வியாபாரத்தில் இருந்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக இந்த அரச குடும்ப உறுப்பினர்கள் பெற்ற செல்வத்தின் அடிப்படையில் ராயல் திவானின் மொத்த செல்வத்தை ப்ளூம்பெர்க் நிறுவனம் மதிப்பிடுகிறது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் மட்டுமே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.

7. மார்ஸ் குடும்பம் – அமெரிக்கா

8. அம்பானி குடும்பம் – இந்தியா
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் உரிமையாளர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி.

முகேஷ் அம்பானி மும்பையில் 27 மாடி கட்டடத்தில் வசித்து வருகிறார். இது உலகின் மிக விலையுயர்ந்த தனிநபர் வாழக்கூடிய ஒரு வீடாக கருதப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் நியூஜெர்சியின் கொளுத்தும் வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காற்றின் வேகம் காரணமாக...

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து தக்க பதிலடி கொடுப்பதற்கான...

பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய...