தற்போது 15 முதல் 20 வரையான எஞ்சின்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்தார்.
இந்நிலையில், ரயில் போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்களுக்கு ரயில் எஞ்சின் பற்றாக்குறையே காரணமாக அமைந்துள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட நேர அட்டவணைக்கமைய ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு சுமார் 48 எஞ்சின்கள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பழுதுபார்ப்பதற்காக அனுப்பப்பட்ட எஞ்சின்களை மீண்டும் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கான காலதாமதமும் ரயில் சேவையில் தாக்கம் செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.