இன்று (02) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையின் ஊடாக மதுபோதையில் வாகனம் செலுத்திய 509 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதில், கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 29 சாரதிகள்,அதிவேகமாக வாகனம் செலுத்திய 59 சாரதிகள், போக்குவரத்து விதிகளை மீறிய 762 சாரதிகள், உரிமத்தை மீறிய 345 சாரதிகள் மற்றும் இதர போக்குவரத்து விதிமீறலில் தொடர்புடைய 3,711 சாரதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 24 மணித்தியாலங்களில் மொத்த போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 5,415 சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது