2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று (02) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி இன்று முதல் ஜனவரி 24ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் நடத்த கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பாடசாலை ஆரம்பமானதும் நாளை (03) முதல் இறுதி தவணை பரீட்சைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.