இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
நெல்சனில் அமைந்துள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசல் பெரேரா 46 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்
அணித் தலைவர் சரித் அசலங்க 24 பந்துகளை எதிர்கொண்டு 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்
இதேநேரம் குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் ,அவிஸ்க பெர்னாண்டோ 17 ஓட்டங்களையும் ,பெத்தும் நிஸ்ஸங்க 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்
219 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.