அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவருடதினத்தன்று பொதுமக்கள் அதிகமாக காணப்பட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும் போர்பென் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.