புதிய அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ மிக முக்கியமான வேலைத்திட்டம், இந்த வேலைத்திட்டம் நாடு மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், இந்த வேலைத்திட்டம் புத்தாண்டின் முதல் நாளில் ஒரு நாடு என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தில் நட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் உண்மையான மாற்றம் ஏற்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
புது வருடத்தில் வேலைத்திட்டம் எனவும், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பாரிய பொறுப்பு எமக்கு இருப்பதாகவும், இதற்கு அனைவரினதும் ஆதரவைப் பெறுவதாகவும் மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.