பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக் தவிர்க்க முடியாத அழகு சாதனப் பொருளாக இருக்கிறது. மேக்கப் போடுவதற்கு ஆர்வம் காட்டாதவர்கள் கூட லிப்ஸ்டிக் உபயோகிக்க தவற மாட்டார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே லிப்ஸ்டிக்கை பூசி அழகை மெருகேற்றி விடலாம்.
அதேவேளையில் லிப்ஸ்டிக் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் சில வகை லிப்ஸ்டிக்குகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.
குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் உள்பட தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்கள் இடம் பெற்றிருப்பதை ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
அதிலும் 24 மணி நேரத்துக்குள் இரண்டு, மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக் பூசும்போது அதில் காணப்படும் குரோமியம் உடலில் கலந்து பாதிப்பை எற்படுத்தக்கூடும்.
மனதில் கொள்ள வேண்டியவை:
- அடர் நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவை அதிக அளவில் நச்சு ரசாயனங்களின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும்.
- லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துங்கள். இது உதடுகளுக்கு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். அதிக பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
- நச்சு இல்லாத அல்லது இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உதட்டுச்சாயங்களை உபயோகிப்பதற்கு முயற்சியுங்கள்.
- கர்ப்ப காலத்தில் லிப்ஸ்டிக் பூசுவதை தவிருங்கள். அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
- வாரத்தில் 2-3 முறைக்கு மேல் லிப்ஸ்டிக் உபயோகிக்காதீர்கள்.