கோட்டை பிரதான நீதவானாக கடமையாற்றிய திலின கமகே இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மொரட்டுவை – மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய கொழும்பு பிரதான நீதவானாக கோட்டை பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கல்கிசை நீதவானை நியமிக்க நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூபாய் 8 மில்லியன் இலஞ்சம் தொடர்பான வழக்கை நடத்துவதற்கு மற்றுமொரு நீதவானை நியமிக்குமாறு கோரி திலின கமகே நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த எழுத்துமூல கோரிக்கையை அடுத்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே தொடர்பானது.
சலோச்சன கமகே தனது உடன்பிறந்தவர் என்பதால், திலின கமகே, குறித்த வழக்கை தான் விசாரிப்பதில் உள்ள முரண்பாட்டை கோரிக்கைக் கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்