follow the truth

follow the truth

January, 3, 2025
HomeTOP1புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானது

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானது

Published on

அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, அந்த மூன்று பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனூடாக, தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மழையின் மாற்றம் குறித்த வானிலை அறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) முதல் மழையுடனான வானிலையில் தற்காலிக குறைவை எதிர்பார்க்கலாம்...

“கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம்”

கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, கைதிகளை மிருகங்களைப் போன்று...

விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவி வகித்த...