follow the truth

follow the truth

January, 2, 2025
HomeTOP1சிறுபோக சேதங்களுக்கான நட்டஈடு தொடர்பிலான அறிவித்தல்

சிறுபோக சேதங்களுக்கான நட்டஈடு தொடர்பிலான அறிவித்தல்

Published on

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான சிறுபோகத்தின் போது பல்வேறு காரணங்களால் நெல் மற்றும் ஏனைய பயிர்கள் அழிவடைந்தன. குறிப்பாக வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டு யானைகளால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் 05ஆம் திகதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் பயிர்ச் சேதங்களுக்கான கொடுப்பனவினை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் சுமார் 80% விவசாயிகளுக்கு 80 மில்லியன் ரூபாவை செலுத்த முடிந்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஜனவரி 05-ம் திகதிக்குள் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நஷ்டஈடு வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மிகவும் கவனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இழப்பீடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024/2025 பெரும்போகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈட்டை பெப்ரவரி மாத தொடக்கத்தில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான...

ஊழியர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை முறையிட WhatsApp எண்

விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய whatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய whatsApp எண் 0707 22 78...

24 மணிநேரத்தில் 509 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இன்று (02) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையின் ஊடாக மதுபோதையில்...