follow the truth

follow the truth

January, 10, 2025
HomeTOP1பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

Published on

2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிகளவிலான அரசு விடுமுறைகளுடன் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் மற்றும் பிரிவெனா மாணவர்கள் வருடாந்த கற்றலுக்காக வருகை தரும் நாட்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில், முதல் 03 வாரங்கள் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக அடுத்த ஆண்டுக்கான கல்வியாண்டு ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடத்திற்கான 26 பொது விடுமுறை நாட்களில் 04 விடுமுறை நாட்கள் மாத்திரமே வார இறுதி நாட்களில் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்தும் வாரநாட்களாக இருப்பதால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த இயலாது, இதனால் பாடசாலைகளை நடத்தும் நாட்கள் 181 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சொகுசுப் பேருந்துகள் விமான நிலையத்திற்குச் செல்ல அனுமதி

பாதை இலக்கம் 187 இன் கீழ் இயங்கும் கோட்டை - கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல்...

துறைமுகத்தில் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் இழப்பு

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பொருட்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமத நிலை காரணமாக துறைமுகத்தில் கொள்கலன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...

வடமேல் மாகாணத்தின் தரம் 10 பரீட்சை கேள்விகளில் சிக்கல்கள்

வடமேல் மாகாண சபையினால் 10ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தவணைப் பரீட்சைக்காக வழங்கப்பட்ட வினாத்தாள் பிரச்சினைக்குரியதாக உள்ளதாகவும்,...