follow the truth

follow the truth

January, 10, 2025
Homeஉலகம்அறுவை சிகிச்சை செய்து கொண்ட இஸ்ரேல் பிரதமர் எப்படி இருக்கிறார்?

அறுவை சிகிச்சை செய்து கொண்ட இஸ்ரேல் பிரதமர் எப்படி இருக்கிறார்?

Published on

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நேற்று நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நெதன்யாகு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

“பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து நல்ல நிலையில் உள்ளார். அவர் மீட்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார், வரும் நாட்களில் அவர் கண்காணிப்பில் இருப்பார்” என்று ஹடாசா மருத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, நெதன்யாகுவுக்கு புரோஸ்டேட் விரிவாக்கத்தால் சிறுநீர் பாதை தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அவரின் அலுவலம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, மார்ச் மாதத்தில், நெதன்யாகு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், நெதன்யாகுவின் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும் பேஸ்மேக்கரை அவரது உடலில் பொருத்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கலிபோர்னியா காட்டுத்தீ – சுமார் 50 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பு

கலிபோர்னியா காட்டுத்தீயால், சுமார் 50 பில்லியன் டொலர் வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்...

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா, ஜப்பானுடன் இணைந்த ரஷ்யா

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷ்யா இணைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க...

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டில் பரவிய தீயில் ஐவர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதை அடுத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீ லாஸ்...