தனது பாதுகாப்பு தொடர்பில் எந்த குறையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
நேற்று இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. எனக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்த குறையும் இல்லை. இருந்த குழுவினை குறைத்துள்ளார்கள். மைத்திரி காலத்தில் மக்களுக்கு எதற்கும் குறையிருக்கவில்லை.. என்றாலும் இப்போது இருப்பவர்கள் போதும்.. வியாபார சந்தையினை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு நல்லதல்ல.. அது சுதந்திரமாக இயங்க வேண்டும். தனிப்பட்ட வியாபாரிகள் இடையேயும் போட்டித்தன்மைகள் நிலவுகின்றன.கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்..”
“.. நான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இருப்பேன். பலரும் இப்போது வழக்குகளை தொடர்ந்துள்ளார்கள். மாகாண சபை தேர்தல்களில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிலவும் என்பது தெரியாது. அதனை பார்த்து தான் நாங்கள் தீர்மானிப்போம்..”