follow the truth

follow the truth

January, 2, 2025
HomeTOP1“தூய்மையான இலங்கை” நிகழ்ச்சித் திட்டம் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பம்

“தூய்மையான இலங்கை” நிகழ்ச்சித் திட்டம் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பம்

Published on

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“தூய்மையான இலங்கை” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 பேர் ஜனாதிபதி செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள், “தூய்மையான இலங்கை” திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பனவாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெங்காய இறக்குமதிக்கு தீர்மானம்

வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக...

நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது நெல்சனில்...

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம்...