follow the truth

follow the truth

January, 1, 2025
Homeஉள்நாடுகறுவா உற்பத்தியை முன்னேற்ற 2025ம் ஆண்டிலிருந்து புதிய திட்டம்

கறுவா உற்பத்தியை முன்னேற்ற 2025ம் ஆண்டிலிருந்து புதிய திட்டம்

Published on

நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெற்றிக தொன் வரை என்பதுடன் அதில் 19,000 மெற்றிக் தொன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையிலிருந்து இலத்தீன் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகமாகக் கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதுடன் அவை 60% ஆனவை ஆகும். இவற்றில் மெக்சிகோ முன்னணி வகிக்கிறது.

கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர குறிப்பிடுகையில்; தற்போது கறுவா ஏற்றுமதியினால் இலங்கைக்கு வருடத்திற்கு 250மில்லியன் டொலர் வெளிநாட்டு செலாவணி கிடைக்கிறது.
அது தவிர இலங்கையின் பிரதான பெருந்தோட்டப் பயிராக கறுவா உற்பத்தியை முன்னேற்றுவதற்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இதுவரை கிடைக்கப்பெற்ற வருமானத்தை இரு மடங்குகளாக அதிகரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாமல் குமார கைது

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின்...

ஜூலைக்கு முன் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலையேற்படலாம்

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

2024ல் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர் 

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...