கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் சுமார் 350 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரம் தாக்கி 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரயில் மோதி 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.