follow the truth

follow the truth

December, 29, 2024
HomeTOP1பயணிகள் போக்குவரத்து பஸ்களை அவதானிக்க விசேட நடவடிக்கை

பயணிகள் போக்குவரத்து பஸ்களை அவதானிக்க விசேட நடவடிக்கை

Published on

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது போக்குவரத்து விதிகளை மீறி தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் பஸ்களை சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட தூர சேவை பஸ்களில் அவர்கள் கணிசமான தூரம் பயணிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், பாதசாரி கடவைகளில் வாகனங்களை முந்திச் செல்வது மற்றும் அதிவேகமாகச் செல்வது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.

பின்னர் சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் பஸ்ஸினை நிறுத்தி சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளுக்கு அறிவுறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் மனுஷவின் சகோதரருக்கு விளக்கமறியல்

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரை எதிர்வரும் 6 ஆம் திகதி...

சீகிரியாவின் அபிவிருத்திக்கு கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

சீகிரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு...

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ, ஒருகொடவத்த, கொழும்பு 10 மற்றும் கொழும்பு...