follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉலகம்பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிரான்ஸ்!

பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிரான்ஸ்!

Published on

ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் ஒமிக்ரோன் மாறுபாடு பரவுகின்ற நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு பிரான்ஸ் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் பிரெஞ்சு பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த பயணக் கட்டுப்பாடுகள் தொற்றுநோய்களின் அலைகளைத் தடுக்க கொண்டுவரப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என பிரெஞ்சு பிரதமர் கூறியுள்ளார்.

ஒமிக்ரோன் மாறுபாட்டு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெள்ளிக்கிழமை முதல் ஜேர்மனி, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்கள் ஒமிக்ரோன் அலையைத் தடுக்கும் முயற்சியில் மேலதிக கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை 50 ஆயிரம் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரை காணாத சவாலுக்கு நாடு தயாராக வேண்டும் என சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி அதிகரிப்பு

ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா சீனா மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

அதானி, மருமகன் சாகர் அதானிக்கு எதிராக இலஞ்சம் குற்றச்சாட்டு இல்லை : அதானி குழுமம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளவரும், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபருமான அதானியின் மீது அமெரிக்காவின் நியூயார்க்...

இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்தம் தொடங்கியது

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல்...