ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து சம்பவம் தொடர்பில் தனியார் பஸ் சாரதி ஜனவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.