follow the truth

follow the truth

April, 26, 2025
HomeTOP2இணையத்தளச் செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்த ஈரான் தீர்மானம்

இணையத்தளச் செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்த ஈரான் தீர்மானம்

Published on

ஈரானில் வட்ஸ்அப் உள்ளிட்ட கையடக்க தொலைபேசி செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எனினும் அந்தத் தடையைத் தளர்த்தும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஈரானுக்கான புதிய ஜனாதிபதி கடந்த ஜுலை மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்போது, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அவர், இணையத்தளச் செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்த அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே, ஈரானின் புதிய ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் இன்று

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று(26) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில்...

டேன் பிரியசாத் கொலை – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை வரும் 30 ஆம் திகதி...

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு சஜித் இரங்கல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிக்கு இரங்கல் தெரிவித்தார். இலங்கையில்...