follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉள்நாடுசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்

Published on

2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (18) ஆரம்பமாகியது.

கொவிட் பரவல் காரணமாக புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சிவனொளிபாதமலைக்குச் செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க வேண்டும்.

புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாதென்று தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதேநேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (18) ஆரம்பமாகிய சிவனொளிபாதமலை பருவகாலம் 2022ஆம் ஆண்டு மே மாதம் 16ம் திகதியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடதக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கம்பஹா ரயில் கடவை 3 நாட்களுக்கு மூடப்படும்

கம்பஹா 16வது மைல் புள்ளியில் உள்ள புகையிரத கடவை மற்றும் பிரதான புகையிரத பாதையின் ஜாஎல பாதை திருத்தப்பணிகளுக்காக...

மாலம்பே – அம்பத்தலே வீதிக்கு விசேட பாதுகாப்பு

திருடர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் சந்திரிகா குமாரதுங்க மாவத்தை மாலம்பே தொடக்கம் அம்பத்தளை வரையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை...

அரிசி இறக்குமதிக்கு பெரும் தடையாக இருக்கும் வர்த்தமானி

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் நீட்டித்துள்ள போதிலும், அது தொடர்பான வர்த்தமானி வெளியிடும் வரை அரிசியை இறக்குமதி...