follow the truth

follow the truth

April, 26, 2025
HomeTOP2இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்: கடும் கோபத்தில் ஈரான்

இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்: கடும் கோபத்தில் ஈரான்

Published on

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இந்த ஆண்டு கொன்றது குறித்த ஒப்புதல் இஸ்ரேலின் வெட்கக்கேடான செயல் என்று ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

“இந்த கொடூரமான குற்றத்திற்கு இஸ்ரேலிய ஆட்சி தனது பொறுப்பை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது வெட்கக்கேடான செயல்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹனியே கொலைக்கு தனது நாடு தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்டார். கொன்று குவித்தது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை ஆகும்.

காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஹமாஸின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய ஹனியே, ஜூலை 31ம் திகதி தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் கொல்லப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் இன்று

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று(26) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில்...

டேன் பிரியசாத் கொலை – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை வரும் 30 ஆம் திகதி...

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு சஜித் இரங்கல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிக்கு இரங்கல் தெரிவித்தார். இலங்கையில்...