follow the truth

follow the truth

December, 25, 2024
HomeTOP1இலங்கை வந்த சீன "Peace Ark" மருத்துவமனை கப்பலை பார்வையிட்ட பிரதமர்

இலங்கை வந்த சீன “Peace Ark” மருத்துவமனை கப்பலை பார்வையிட்ட பிரதமர்

Published on

சீன அரசாங்கத்தின் Mission Harmony-2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark” என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பார்வையிட்டார்.

“Peace Ark” என்ற இந்த கப்பல் டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்கும்.

இந்த சமாதானக் கப்பல் திட்டத்தின் மனிதாபிமான முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை மக்களுக்கு இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக சீன அரசாங்கத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது சுகாதாரத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்த கப்பலின் பணியின் முக்கியத்துவத்தை சீனத் தூதுவர் வலியுறுத்தினார். கப்பலில் உள்ள நவீன வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து கப்பலின் மருத்துவக் குழுவினர் விளக்கமளித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மதுபானசாலைகள் இன்று மூடப்படும்

மதுபானசாலைகள் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என்று...

திருத்தப்பட்ட அஸ்வெசும திட்டம் வர்த்தமானியில் வெளியீடு

திருத்தப்பட்ட அஸ்வெசும திட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வறிய குடும்பங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உதவித்தொகை 8500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக...

வசந்த ஹந்தபாங்கொட காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும்...