கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று(18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு நாளை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.