follow the truth

follow the truth

April, 24, 2025
HomeTOP2அர்ச்சுனாவின் பொதுவெளிக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இல்லை

அர்ச்சுனாவின் பொதுவெளிக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இல்லை

Published on

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் – அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில் 200மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி ஊழல் செய்யப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பான உண்மையான நிலையை அறிந்துகொள்ள தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிடம் விளக்கம் கோரி இருந்தது. அதற்கான பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பு விளக்கம்

1. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க SHDP (இரண்டாவது) என்கின்ற 5ஆண்டு திட்டத்தில் தான் கட்டுமாண வேலைகள் நடைபெற்றது. அதனால் இதற்கு என்று தனி திட்டம் (Master Plan ) போடப்படவில்லை. இதற்கான கட்டுமாண வேலைகள் யாவும் கட்டிடங்கள் திணைக்களம் ஊடாகவே விலைமனுக்கள் கோரப்பட்டு கட்டுமாணம் மேற்கொள்ளப்பட்டது.

3. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க கீழ்வரும் முறையில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு – 15மில்லியன்,
2016ஆம் ஆண்டு – 41.49மில்லியன்,
2017ஆம் ஆண்டு – 35.38மில்லியன்,
2018ஆம் ஆண்டு – 26மில்லியன் ,
2020ஆம் ஆண்டு – 2.00மில்லியன் ,
2021ஆம் ஆண்டு – 2.56மில்லியன் ,
2021ஆம் ஆண்டு – 4.93மில்லியன் ,
2022ஆம் ஆண்டு – 3.96மில்லியன் ,
2022ஆம் ஆண்டு – 0.43மில்லியன் ,
2023ஆம் ஆண்டு – 3.56மில்லியன் ,
2023ஆம் ஆண்டு – 16.91மில்லியன் ,
2023ஆம் ஆண்டு – 2.654மில்லியன் ,
2023ஆம் ஆண்டு – 6.69மில்லியன் ,
2024ஆம் ஆண்டு – 12.00மில்லியன் ,
2024ஆம் ஆண்டு – 25.20மில்லியன் ,
2024ஆம் ஆண்டு – 3.59மில்லியன் ,

இந்நிலையில் நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா அவர்கள் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அதில் 200மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது என்று அரச தகவல் ஊடாக நிரூபணம் ஆகியுள்ளது.

எனவே மருத்துவர் அருச்சுனா அவர்கள் கூறி இருக்கும் இந்த குற்றச்சாட்டுக்கு உண்மை உள்ளது என்றால் அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் முன்வைக்கவேண்டும் என்று பசுந்தேசம் அமைப்பு பகிரங்கமாக கோரிக்கை முன்வைக்கின்றதாகவும் கூறியுள்ளது.

பொய்கூறி மாட்டிக்கொண்ட அருச்சுனா எம்.பி | Arjuna Mp Caught Lying Chavakachcheri Hospital

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். கோட்டேயில் உள்ள...

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள்...

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து...