அரசியல் பாசாங்குத்தனத்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரிசி தட்டுப்பாடு பற்றி பேசுகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்திருந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அது அரசியல் போலித்தனம் அல்ல. நாட்டு மக்களிடம் பாற்சோறு உண்ணும் அளவு அரிசி உள்ளது. எதிர்க்கட்சியாக குரல் எழுப்பும் எம்.பி.க்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், பாற்சோறு இல்லை என்றால், எங்களுடன் பாற்சோறு சாப்பிட வாருங்கள், நாங்கள் பாற்சோறு தன்சல் செய்வோம். இந்த நாட்டில் தன்சலுக்கு கொடுப்பதற்கு போதுமான அரிசி உள்ளது..”