follow the truth

follow the truth

December, 23, 2024
Homeவிளையாட்டுதென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்த முதல் அணி

தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்த முதல் அணி

Published on

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ஓட்டங்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ஓட்டங்களில் அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்த அணி என்ற வரலாற்று சாதனை படைத்தது பாகிஸ்தான். 3 போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என கைப்பற்றியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை ஒருநாள் அணி

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையில் பெயரிடப்பட்ட இந்த அணியில் 16...

இந்தியில் தான் பேசுவாரா? ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். அவரது...

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி : முரளிதரன், வார்னேவை விஞ்சிய அஷ்வின்

"சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய...