பண்டிகைக் காலத்தில் கோழி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேவைக்கு ஏற்ப போதுமான அளவு கையிருப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டு வருவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
ஒரு கிலோகிராம் உறைந்த கோழி இறைச்சியை ஆயிரம் ரூபாவிற்கும் குறைவான விலையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும், முட்டை ஒன்றின் விலை 31 ரூபா தொடக்கம் 33 ரூபா வரை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.