நாளாந்தம் மண்ணெண்ணெயின் தேவை சுமார் 100 மெட்ரிக் டன்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சாதாரண நாட்களில் மண்ணெண்ணெயின் தேவை 500 மெட்ரிக் டன்னாக உள்ளதாகவும், தற்போது மண்ணெண்ணெயின் தேவை 600 மெட்ரிக் டன்னை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்ணெண்ணெயினை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.