மறைந்த ஜெக்சன் அன்டனியின் மகளின் கணவர் கசுன் மஹேந்திர ஹீனடிகல பொலிஸாரால் கைது செய்தமை தற்போதுள்ள சட்டங்களை மீறி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கசுன் மஹேந்திர ஹீனடிகல, தனது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் அண்மையில் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதுதொடர்பான சம்பவம் தொடர்பில் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.