எந்தவொரு உண்மையையும் பொய் என்று கூறுவதற்கும், எந்தவொரு பொய்யையும் உண்மை என்று கூறுவதற்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.
ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் ஏதாவது நல்லது செய்யும் போது அதன் எதிர்மறையான பக்கத்தைப் பார்க்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறுகிறார்.
சமுதாயத்தைப் பாதிக்கும் தீய செயல்களைச் செய்தாலும் அதை நல்லது என்று சொல்லவும் மக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஜனநாயக உரிமைக்கு அரசாங்கம் ஒருபோதும் வேலி போடாது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், முடிவுகள் வர கொஞ்சம் நேரம் எடுக்கும் என்றும், எதையும் விமர்சிக்கும் முன் முடிவுக்காகக் காத்திருப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வருவதற்காக தமது கட்சியினர் ஒருபோதும் பொய் சொல்லவில்லை என தெரிவித்த அவர், அவ்வாறானதொரு தேவை ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.