follow the truth

follow the truth

December, 21, 2024
HomeTOP2குரங்குகளை கொலை செய்வதில் தப்பேயில்லை - எஸ்.பி

குரங்குகளை கொலை செய்வதில் தப்பேயில்லை – எஸ்.பி

Published on

குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்ய வேண்டுமெனவும் நாடு முழுவதிலும் ஆண்டுதோறும் தெருநாய்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிலேயே அவர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவின் கருத்துடன் பூரணமாக இணங்குவதாகவும், விலங்குகளை கொலை செய்வது குறித்து சிலர் கருத்து வெளியிட்டு வரும் போதிலும் அவற்றை கருத்திற்கொள்ளத் தேவையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், காட்டு யானைகள் தொடர்பில் வேறு விதமான அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவித்த அவர், இலங்கையில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் யானைகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யானைகளுக்கான தடுப்ப வேலிகளை பலப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். சூழலியலாளர்களின் கருத்துக்களை மட்டும் கேட்டால் இந்த நாட்டில் விவசாயத்தை மேற்கொள்ளவோ அல்லது பொதுமக்களை பாதுகாக்கவோ முடியாது போகும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தனது தாயாரை சந்திப்பதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு

ஜனாதிபதி தனது தாயாரை சந்திப்பதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (20) பிற்பகல்...

LGBTQ பிரிவினரை நமது சமூகம் புரிந்து கொண்டுள்ளதா? : சுகாதார அமைச்சின் கொள்கை பகுப்பாய்வு பணிப்பாளர்

‘ஆணுக்கு இன்னுமொரு ஆண் மீதும் ஒரு பெண்ணுக்கு இன்னுமொரு பெண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது ஒரு நோயல்ல. அதே...

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து...