தேசிய பாடசாலைகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்தின் அதிபர் பதவிக்கென விண்ணப்பங்களை கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
உரிய விண்ணப்பங்கள் அதற்கான ஆவணங்களை எதிர்வரும் 11ம் திகதியளவில் கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகவுள்ளதுடன் விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அறிவிப்பினை பாடசாலை ஆவணங்கள், புள்ளியிடல் மற்றும் முன்மாதிரி விண்ணப்பம் என்பன அமைச்சின் இணையத்தளத்தில் விசேட அறிவிப்பின் கீழ் தரையிறக்கம் செய்துகொள்ள முடியுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.