follow the truth

follow the truth

December, 20, 2024
HomeTOP1சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

Published on

சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகததாச தேசிய விளையாட்டு வளாகம் என்பது சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல்தர விளையாட்டு வசதிகளை வழங்கும் விளையாட்டு வளாகமாகும்.

400 மீ, 200 மீ மற்றும் 80 மீற்றர் செயற்கை தடங்களை சர்வதேச தரத்திற்கு ஏற்ப சகல வசதிகளுடன் கொண்ட இலங்கையின் ஒரே விளையாட்டு வளாகமும் இதுவாகும்.

2018 ஆம் ஆண்டில், செயற்கை தடம் மீண்டும் அமைக்கப்பட்டது, ஆனால் அது பல விரிசல்களைக் கொண்டிருப்பதால் தற்போது தேசிய மட்ட விளையாட்டுகளுக்கு தகுதியற்றது என்று இலங்கை தடகள சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே சர்வதேச தரத்திற்கமைய இந்த தடத்தை புனரமைப்பது தேசிய முன்னுரிமையாக அங்கீகரிக்கப்பட்டு, இலங்கை வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் இது புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, சுகததாச தேசிய விளையாட்டுக்கழகத்தின் செயற்கை தடங்களை மீள் செப்பனிடுதல், உதைபந்தாட்ட மைதானம் அமைத்தல், தேவையான மின் உபகரணங்களை நிறுவுதல் மற்றும் மின்விளக்கு கோபுரங்களை நிர்ணயிக்கப்பட்ட கொள்வனவு நடைமுறைகளை பின்பற்றி புனரமைப்பதற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்மொழிந்தார். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 சட்டவிரோத நிதி நிறுவனங்கள் – மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கை

சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சட்டவிரோத நிதி திட்டங்கள்...

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளது

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

எட்கா ஒப்பந்தம் தொடர்பான அரசின் நிலைப்பாடு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை அல்லது எட்கா உடன்படிக்கையில் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை...