follow the truth

follow the truth

December, 19, 2024
HomeTOP1முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய அகதிகள் படகு திருகோணமலைக்கு

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய அகதிகள் படகு திருகோணமலைக்கு

Published on

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை கொண்ட நாட்டுப்படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்று (19) காலை மியன்மார் அகதிகள் சுமார் 100 இற்கும் அதிகமானவர்களுடன் நாட்டுப்படகு ஒன்று கரையொதுங்கியிருந்தது.

குறித்த படகில் சிறுவர்கள், கர்ப்பிணி பெண் உட்பட்ட 100 ற்கும் அதிகமானவர்கள் இருந்துள்ளனர்.

மியன்மாரில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறு எந்த நாட்டிலாவது தஞ்சங் கோருவதற்கு குறித்த மக்கள் நாட்டுப்படகில் புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய காலநிலை காரணமாக காற்று இழுவை அதிகமாக இருந்ததனால் படகு இலங்கையை நோக்கி தள்ளப்பட்டதன் காரணமாகவே குறித்த கப்பல் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகில் இருப்பவர்கள் சுமார் பத்து நாட்களாக கப்பலில் இருந்ததனால் உணவுகள் எதுவும் இன்றி அவதிப்பட்டுள்ளனர், சிலர் மயக்கமும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டமையை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் மீனவ அமைப்புக்கள் உள்ளிட்ட மக்களால் உலருணவு பொருட்கள், உணவுகள் வழங்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் மதிய உணவு வழங்கினர்.

குறித்த நாட்டுப்படகை கரைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் கடற்படையினரின் கப்பல் உதவியுடன் அதனை திருகோணமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதமொன்று இன்று (19) மாலை ரம்புக்கனை புகையிரத நிலைய அருகே...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை நாளை கூடுகிறது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (20) கூடவுள்ளது. இது தொடர்பான...

கொவிட் காலத்தில் ரேபிட் ஆன்டிஜென் இறக்குமதியின் போது நடந்த மோசடிகள் பற்றிய விசாரணைகள் ஆரம்பம்

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை கொள்வனவு செய்த போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சு...