follow the truth

follow the truth

December, 19, 2024
Homeவிளையாட்டுடேய் தகப்பா என்னடா இதெல்லாம்.. தந்தை பேட்டி குறித்து அஸ்வினின் வைரல் பதிவு

டேய் தகப்பா என்னடா இதெல்லாம்.. தந்தை பேட்டி குறித்து அஸ்வினின் வைரல் பதிவு

Published on

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது சக வீரர்கள் உள்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓய்வினை அறிவித்த அஷ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். அஷ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய டெஸ்ட் அணியின் முதல்தர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் திடீரென ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.

திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம். அவமானப்பட்டதால் தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது ஓய்வை அறிவித்திருக்கலாம். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் தலையிட முடியாது என அஷ்வின் தந்தை ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் என் அப்பா கூறியதை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கவில்லை என அஷ்வின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்;

ஊடகம் முன்னிலையில் எப்படி பேசுவது என்று அவருக்கு தெரியாது. டேய் டாடி என்னடா இதெல்லாம். எனது தந்தை கூறியதை பெரிதுபடுத்தாதீர்கள். எனது ஓய்வு குறித்து என் தந்தை கூறிய கருத்துக்களை ஏற்க வேண்டாம். அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது”

என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது என ஆஸ்திரேலிய செய்தியாளர்களுடன் விராட் கோஹ்லி வாக்குவாதத்தில்...

நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர்...

ஓய்வை அறிவித்தார் அஷ்வின்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர்...