follow the truth

follow the truth

December, 19, 2024
HomeTOP2வாகன இறக்குமதி அதிகரித்தால் வரி அறவிடப்படும்..- மத்திய வங்கி ஆளுநர்

வாகன இறக்குமதி அதிகரித்தால் வரி அறவிடப்படும்..- மத்திய வங்கி ஆளுநர்

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பத்திரிகை ஆசிரியர்களுடனான உரையாடலில் தெரிவித்தார்.

இதன்படி, வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்ததுடன், வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மீட்பதற்கு வாகன இறக்குமதி அவசியமானது எனவும் வாகன இறக்குமதி அதிகமாக இருந்தால் வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் அதனை கட்டுப்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் உயர்மட்ட நிர்வாகத்தினர் நேற்று மத்திய வங்கியின் தலைமையகத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து நாட்டின் நிதி மற்றும் பொருளாதார கல்வியறிவு குறித்து பத்திரிகை ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியிலும் நாட்டு மக்களுக்கு உரை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருடாந்தம் நடைபெறும் இந்த வருட இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருவதாக...

சர்ச்சைக்குரிய ரோயல் பார்க் கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

ராஜகிரிய ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜூட்...

“எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் IMF கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும்”

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தங்கள்  விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பில் இருந்தே முன்வைக்க வேண்டும்...