மும்பையின் கடற்கரையில் நேற்று இந்திய கடற்படையின் விரைவுப்படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எலிஃபெண்டா தீவுகளில் இருந்து 110 பயணிகளை இந்தியா கேட்வேக்கு ஏற்றிச் சென்ற வேகப் படகு, கடலில் என்ஜின் சோதனையின் கீழ், இயங்கி வந்த கடற்படை விரைவுப் படகு இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் கடற்படை படகில் இருந்த இருவர் உட்பட 12 பொதுமக்கள் மற்றும் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் என 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், படகில் இருந்த 99 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை கடற்கரையில் படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட கடற்படையின் படகு சாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.