follow the truth

follow the truth

December, 19, 2024
HomeTOP2அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல்

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல்

Published on

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தியால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாம் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் அவதூறான விடயங்கள் பரப்பப்பட்டமை, கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட விடயங்களால் தமக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி வைத்தியர் சத்தியமூர்த்தியால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த யாழ்.மேலதிக மாவட்ட நீதிபதி அ.ஆனந்தராஜா, வழக்காளிக்கு எதிராக எவ்வித அவதூறான கருத்துகளை தெரிவிக்கக்கூடாதென அறிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஞானசார தேரரை கைது செய்யுமாறு மீண்டும் பிடியாணை

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம்...

குடியிருப்புகளின் கணக்கெடுப்பு நிறைவு

சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பிற்கமைய வீடற்றவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வருட தொகைமதிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், அடுத்த 05...