follow the truth

follow the truth

December, 19, 2024
Homeஉள்நாடுநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

Published on

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு ஜனவரி...

சட்டவிரோத மதுபான பரவலை தடுக்க புதிய மதுபான வகை?

சட்டவிரோத மதுபானத்திற்கு மாற்றாக குறைந்த விலையில் மதுபான வகையொன்று அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர்...

ஞானசார தேரரை கைது செய்யுமாறு மீண்டும் பிடியாணை

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்...