follow the truth

follow the truth

December, 18, 2024
HomeTOP2"நிரூபித்தால் எம்பி பதவியை இராஜினாமா செய்கிறேன்"

“நிரூபித்தால் எம்பி பதவியை இராஜினாமா செய்கிறேன்”

Published on

சட்டப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(18) மீண்டும் நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.

வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் நேற்றைய தினம் (17) நாடாளுமன்ற வாதத்தில் தெரிவித்திருந்தமைக்கு இன்று பதிலளிக்கையிலேயே நாமல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சையின் போது, நாமல் ராஜபக்ச அமரும் போது தனியறையில் இரண்டு சட்டத்தரணிகள் அவருக்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்கு பதில் அளித்த நாமல் ராஜபக்ஷ, தமக்கு எதிராக முன்வைக்கப்படும் ஏனைய குற்றச்சாட்டுகளைப் போன்று இதுவும் அரசியல் இலாபங்களுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும், தான் குளிரூட்டப்பட்ட தனியறையில் பரீட்சை எழுதியிருப்பின் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படின் தான் எம்பி பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாகவும் அவ்வாறு இல்லையென்றால் வசந்த சமரசிங்க அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

மேலும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனவும் இது இலங்கை சட்டக் கல்லூரியின் நம்பகத்தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை – டிசம்பர் 31 நீதிமன்றம் தீர்ப்பு

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...

கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார...

உலக அரபு மொழி தினம் : அரபு மொழியை காக்க சவூதியின் முன்னணி பங்கு

வருடாந்தம் டிசம்பர் 18ஆம் திகதியன்று, அரபு மொழியின் செழுமை மற்றும் அதன் பெறுமையை பறைசாற்றும் விதத்தில் உலகம் முழுவதும்...