தனது சகல கல்வித் தகைமைகளையும் இன்று (18) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்திருந்தார்.
தனது சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர் உரையாற்றுகையில் இவைகள் பொய்யாக இருக்கும் பட்சத்தில் அல்லது தான் பொய்யான சான்றிதழ்களை முன்வைத்திருந்தால், அது குறித்து நிரூபிக்கப்படும் பட்சத்தில் தான் எதிர்கட்சித் தலைமைப் பதவியில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், இறுதியில் அவரது பிறப்புச் சான்றிதழையும் சபையில் சமர்ப்பித்திருந்தார்.