10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற நிசாம் காரியப்பர் இன்று (18) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நேற்று (17) நான்கு புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக அர்ஜூன சுஜீவ சேனசிங்க, முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது மற்றும் மனோ கணேசன் மற்றும் புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மொஹமட் பைசர் முஸ்தபா ஆகியோர் ஆவர்.